FAQs
தேசிய மக்கள் சக்தி — அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் பதில்களும்
தேசிய மக்கள் சக்தியின் சமூக கவனம் தொடர்பான விவாதங்களில் எழுந்த கேள்விகளின் அடிப்படையில் பின்வரும் கேள்வி பதில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
தேசிய மக்கள் சக்தியுடன் சேர நினைப்பவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியுடன் ஏற்கனவே இணைந்திருப்பவர்களுக்கும் சில சந்தேகங்களும் கேள்விகளும் எழுவது இயற்கையே.
கீழே கொடுக்கப்பட்டுள்ள பதில்கள் மேற்குறிப்பிடப்பட்ட இரு குழுக்களுக்கும் தெளிவையும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தும்.
இந்தக் கேள்விகளும் பதில்களும் தேசிய மக்கள் சக்தியின் வேலைத்திட்டம், தற்கால அரசியல் தருணத்தில் அது எவ்வாறு பொருந்துகிறது, தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு நமது பங்களிப்பின் முக்கியத்துவம் ஆகியவற்றை விளக்குகிறது.
1- தேசிய மக்கள் சக்தி (NPP) என்றால் என்ன?
தேசிய மக்கள் சக்தி என்பது ஒரு அரசியல் இயக்கம். தலைகளை மட்டும் மாற்றுவதற்குப் பதிலாக, இலங்கை சமூகத்தில் ஒழுங்கான கட்டமைப்பு மாற்றத்தையும் முறைமையில் மாற்றத்தையும் ஏற்படுத்த, அனைத்து மக்களும் ஒன்றிணைந்து செயல்படும் ஒரு வெளி. தேர்தலில் நிற்பது மட்டுமன்றி, மக்களை வலு படுத்துவதன் மூலம் சமூக மாற்றத்திற்காக தொடர்ந்து உழைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு சமூக இயக்கமாகும்.
பிரதான கட்சிகளின் அரசியல் தலைவர்கள், பொதுச்சேவை, வர்த்தகம், ஊடகத்துறை போன்ற துறைகளில் தம் இடத்தை நிலை நிருத்தி நாட்டை பாதாளத்திற்கு அனுப்புவதற்குக் காரணமான ஊழல் வளையத்தின் ஆதிக்கத்திலிருந்து இலங்கையை விடுவித்து நாட்டை முன்னேற்றத்திற்கு நோக்கி அழைத்து செல்வதே தேசிய மக்கள் சக்தியின் நோக்கமாகும்.,
2- தேசிய மக்கள் சக்திக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்குமான என்ன மாதிரியான தொடர்பு உள்ளது?
தேசிய மக்கள் சக்தியும் மக்கள் விடுதலை முன்னணி யும் ஒன்றல்ல. மக்கள் விடுதலை முன்னணி தேசிய மக்கள் சக்தியில் இருக்கும் பலம் வாய்ந்த அரசியல் கட்சியாகும். ஆனால் தேசிய மக்கள் சக்தி என்பது பல கட்சி சார்பற்ற குழுக்களும், அரசியல் இயக்கங்களும், சிவில் குழுக்களும் சேர்ந்து உருவாக்கப்பட்ட அரசியல் அரசியல் இயக்கம் ஆகும். தேசிய மக்கள் சக்தியின் முடிவெடுக்கும் குழு, குழுக்களின் அளவைப் பொருட்படுத்தாது, பெரிய குழுக்களாக இருந்த போதும் சிறிய குழுக்களாக இருந்த போதும் , அனைத்து குழுக்களிலருந்தும் கட்சிகளிலிருந்தும் இயக்கங்களிலிருந்தும் தலா இரண்டு பிரதிநிதிகளை பங்குபற்ற அனுமதி் அழிக்கிறது.
அதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் பிம்பத்தால் தேசிய மக்கள் சக்தியின் பிம்பம் சாதகமான முறையில் செல்வாக்கு செலுத்தி உள்ள்து என்பது ஒப்புக்கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். எழுபது ஆண்டுகால நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்து ஊழலற்ற ஆட்சியை அறிமுகப்படுத்த தேசிய மக்கள் சக்தி முன்மொழியும்போது, மக்கள் விடுதலை முன்னணியின் கடுமையான ஒழுக்கத்துடன் கூடிய ஊழலற்ற நடைமுறை அதனை செல்லுபடியாக்குவதற்கு உதவியாக அமைகிறது. மக்கள் விடுதலை முன்னணியின் கட்சிப் பொறிமுறையின் அமைப்பு தேசிய மக்கள் சக்தியின் அமைப்பின் விம்பத்தை மேலும் மெருகூட்ட வழிவகுத்தது.
3- தேசிய மக்கள் சக்தி எவ்வாறான இலங்கையை கட்டியெழுப்ப உள்ளது?
முதலாளித்துவ, சமூக ஜனநாயக அல்லது சோசலிச முத்திரையுடன் அறிமுகப்படுத்துவதற்குப் பதிலாக, தேசிய மக்கள் சக்தி விரும்பும் சமூகத்தின் அடிப்படை பண்புகளை அறிமுகப்படுத்துவது மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும்.
தேசிய மக்கள் சக்தியின் தலையீட்டின் ஊடாக உருவாக்கப்படும் இலங்கையின் அடிப்படை பண்புகள் பின்வருமாறு இருக்கும்:
- ஊழலற்ற, ஒழுக்கமான, மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி ஆட்சியானது, தற்போது இலங்கையின் உயர் மட்ட அதிகாரிகள் தொடங்கி கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் வரை ஆட்டிப்படைக்கும் ஊழல் அரசியல் கலாச்சாரத்தில் தீர்க்கமான மாற்றத்தை ஏற்படுத்தும். இவ்வாறான தூய்மையான நிர்வாகம் காரணமாக இலங்கை சமூகம் பரந்தளவிலான நன்மைகளை பெற்றுக்கொள்ளும். இலங்கையை அபிவிருத்திப் பாதையில் நகர்த்துவதற்கான அடித்தளம் அமைக்கப்படும்.
- வளர்ந்து வரும் பொருளாதாரமானது பொது மற்றும் தனியார் துறைகள் இரண்டினதும் பங்களிப்புடன் உருவாகும் ஒரு பொருளாதாரமாகும்.
- சேவைப் பொருளாதாரத்தைப் பராமரிப்பதுடன் சேவைப் பொருளாதாரத்திலிருந்து உற்பத்திப் பொருளாதாரத்திற்கு மாறுவதற்கான தீர்க்கமான நடவடிக்கைகள் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் எடுக்கப்படும். இங்கு, நமது நாட்டின் வளங்களை பயன்படுத்தும் தொழில்களை உருவாக்குவதுடன், நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளை (உதாரணம் – உணவு, விவசாயம், எரிசக்தி, போக்குவரத்து, சுகாதாரம்) நிறைவேற்றும் வகையில் இந்தத் தொழில்களின் வளர்ச்சியை அடைவதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
- மக்களின் அரசியல் ஈடுபாட்டை வாக்களிப்பதில் மட்டுப்படுத்துவது ஜனநாயக சமூகத்தின் இருப்புக்கு தீங்கு விளைவிக்கும் என்ற அடிப்படையில், தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் மக்கள் தொடர்ந்து அரசியலில் ஈடுபடும் கலாச்சாரம் உருவாக்கப்படும்.
- தற்போது இலங்கை சமூகத்தில் பரவி காணப்படும் இருப்பவர் இல்லாதவர் இடைவெளியை இல்லாதொழிக்கவும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமூகக் குழுக்களைப் பாதுகாக்கவும் வலுவான சமூக நலத் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.
- தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ், வெளிநாடுகளுடன் சிறந்த முறையில் உறவைப் பேண அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். சமீபகால ஆட்சியாளர்களின் முட்டாள்தனத்தால் ஏற்கனவே பல்வேறு சக்தி வாய்ந்த அரசுகளின் கைக்கூலியாக மாறிவிட்ட சூழ்நிலையில் இது இலகுவான காரியமாக இருக்காத போதும் இதனை சாமர்த்தியமாக நடத்த வேண்டி இருக்கும். ஊழலற்ற ஆட்சியில் ஏற்படக்கூடிய உள் ஸ்திரத்தன்மையும், அதனால் அரசின் மீது ஏற்படக்கூடிய மரியாதையும் வெளிநாடுகளுடன் உகந்த முறையில் ஒப்பந்தம் செய்ய உதவும்.
- கல்வி, சுகாதாரம், போக்குவரத்து ஆகியன நாட்டு மக்களின் வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடைய துறைகளில் அனைத்து மக்களுக்கும் சம வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் பொதுத்துறையின் பங்களிப்பு பலப்படுத்தப்படும்.
- எந்த இனக்குழுவும் மற்ற இனக்குழுக்கள் மீது தமது ஆதிக்கத்தை திணிக்க அனுமதிக்கப்படாத்துடன், இனக்குழுக்களுக்கு இடையில் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கான அடித்தளம் உருவாக்கப்படும். குறிப்பாக சிறுபான்மை இனத்தவரிடையே இலங்கை அரசின் மீது நம்பிக்கையை ஏற்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
- ஆட்சியாளர்களை தெய்வமாகக் கருதி, குடிமக்கள் அவர்களை வணங்கும் அவலநிலையில் இருக்கும் ஆட்சியாளர்-குடிமக்கள் உறவை மாற்றி, சில ஆண்டுகளுக்கு ஒரு நாட்டின் வாக்கினால் மக்கள் சேவையாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்ற எண்ணத்தையும் தேர்தலில் ஒரு அரசியல் குழுவிற்கு தற்காலிகமாக தங்கள் அதிகாரத்தை வழங்கும் பெருமைக்குரிய குடிமக்கள் வாக்காளர்கள் என்பதும் மக்கள் மனதில் நிலைநாட்டப்படும்.
- சுற்றுச்சூழலுடன் நல்லிணக்கத்துடன் வாழ்தல், உலகம் எதிர்காலத்தில் பயணிக்கும் பாதையாக ஏற்று, தேசிய மக்கள் சக்தி அடுத்த 20-30 ஆண்டுகளில் அத்தகைய நல் இணக்கத்துடனான சமுதாயத்தை உருவாக்க ஒரு முறையான பயணத்தைத் தொடங்கும்.
4- தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கை என்ன? தனியார் துறைக்கு எதிரானதா?
அனைத்து மக்களும் பொருளாதாரத்தில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு, பொருளாதாரத்தின் பலன்கள் மக்களிடையே நியாயமாக விநியோகிக்கப்படும் அமைப்பை உருவாக்குவதே தேசிய மக்கள் சக்தி நோக்கமாகும். அத்தகைய அமைப்பை உருவாக்குவதில், பொருளாதாரம் நகர வேண்டிய ஒட்டுமொத்த திசையைப் பற்றிய திட்டங்களை உருவாக்கி அதை வழிநடத்தும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட தேசிய கொள்கை கட்டமைப்பிற்குள் தனியார் துறையின் பங்களிப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், அது தொடர்பான வசதிகளை வழங்கி ஊக்குவிக்கும். இதன் காரணமாக, தேசிய மக்கள் சக்தி் தனியார் துறைக்கு எதிரானது என்ற கருத்து கட்டுக்கதையாக உள்ளது. குறிப்பாக இந்நாட்டின் தனியார் துறையைச் சேர்ந்த சிறு அளவிலானதும் நடுத்தர அளவிளானதுமான வியாபாரங்களின் வளர்ச்சி நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது என்பதை தேசிய மக்கள் சக்தி ஒப்புக்கொள்கிறது. அதற்கு தேவையான வசதிகள், தகவல்கள் போன்றவற்றை வழங்கி இந்தத் வியாபாரங்களை வலுப்படுத்த தேசிய மக்கள் சக்தி அரசு செயல்படும். இதற்கிடையில், பொருளாதாரத்தின் முக்கிய மையங்களான எரிசக்தி துறை மற்றும் நிதித்துறை போன்றன அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
5- இலங்கை தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியை தீர்க்க தேசிய மக்கள் சக்தி எவ்வாறு செயல்படும்?
இதற்கு குறுகிய காலதும் நீண்ட காலதுமான்நடவடிக்கைகள் தேவை. எந்த வித நடவடிக்கைகளை மேற்கொள்வதாயினும், தேவையான நிபந்தனையானது மக்களின் நம்பிக்கையைப் பெற்ற, மக்களின் ஆணையைப் பெற்ற, தமக்கென கொள்கைகளைக் கொண்ட அரசாங்கம் ஒன்று ஆட்சிக்கு வர வேண்டும் என்பதாகும். அவ்வாறான அரசாங்கம் ஒன்று ஆட்சிக்கு வராது எந்த ஒரு பொருளாதார நடவடிக்கையும் வெற்றியடையாது.
குறுகிய காலத்தில், இலங்கை எதிர்கொள்ளும் கடன் நெருக்கடியைத் தீர்க்க பின்வரும் நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்படலாம்:
கடனை செலுத்துவதை ஒத்திவைக்க சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துதல், நிதி வசதிகள் கிடைக்குமா என மூன்றாம் தரப்பினருடன் கலந்துரையாடல், வெளிநாட்டுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பும் பணப்பரிமாற்றத்தை அதிகரிக்கச் செய்தல், சுற்றுலாத் துறையில் துரித வளர்ச்சிக்கான திட்டங்களைத் தயாரித்தலும் , நாட்டின் நுகர்வு முறையில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்தலும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் நடைமுறையில் நிறைவேற்றப்படலாம் என்று நாங்கள் நினைக்கிறோம். உதாரணமாக, ஊழலற்ற, தொலைநோக்கு பார்வை கொண்ட அரசாங்கம் ஒன்று நாட்டில் ஆட்சிக்கு வரும்போது, புலம்பெயர் இலங்கை சமூகத்தில் நாட்டை ஆதரிப்பதற்கன நாட்டின் மீதான நம்பிக்கை கட்டியெழுப்பப்படும். ஏனென்றால், இவர்கள் அனுப்பும் பணம் திருடப்படாது, நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படும் என்ற உத்தரவாதம் உறுதியாவதனாலாகும். அதனால்தான் பொருளாதார நடவடிக்கைகள் வெற்றிபெற வேண்டுமானால் அரசியலில் மாற்றம் வரவேண்டும் என்பதை அந்த் வழியுறுத்துகிறோம்.
மேலும், நீண்ட கால நோக்கில், மீண்டும் ஒரு முறை கடன் நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக, நாட்டின் தேசிய உற்பத்தியைப் பலப்படுத்தும் உற்பத்திப் பொருளாதாரத்திற்கு இலங்கை மாற வேண்டும். அதற்குத் தேவையான அடித்தளத்தை அமைக்க, தேசிய மக்கள் சக்தி அரசின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்படும்.
6- சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து உதவி பெறுவது தொடர்பாக தேசிய மக்கள் படையின் நிலைப்பாடு என்ன?
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு முதலில் தேசியத் திட்டம் ஒன்று அத்தியவசியமாகும். உலகில் எந்தவொரு நிறுவனத்துடனும் கொடுக்கல் வாங்கல்களை கையாள்வதற்கு முன்னும் தேசியத் திட்டம் ஒன்றை உருவாக்குவது முக்கியமாகும். சர்வதேச நாணய நிதியம் மீது குருட்டு நம்பிக்கை தேசிய மக்கள் சக்திக்கு இல்லை.
சர்வதேசம் தொடர்பான அனுபவங்களை எடுத்து நோக்கினால், சர்வதேச நாணய நிதியத்தின் தலையீட்டால் பொருளாதார நெருக்கடிகள் மேலும் சிக்கலடைந்த சந்தர்ப்பங்கள் பற்றிய எடுத்துக்காட்டுகள் உள்ளன. எவ்வாறாயினும், தேசிய திட்டத்தின் கீழ் இருதரப்பு மற்றும் பலதரப்பு உதவிகளைப் பெறுவதற்கு தேசிய மக்கள் சக்தியானது திறந்த மனப்பாங்கை கொண்டுள்ளது.
எனவே, ஓர் பலதரப்பு அமைப்பாக, சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது முற்றிலும் நிராகரிக்கப்பட மாட்டாது. தேசியத் திட்டத்தின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் மட்டுமின்றி எந்தவொரு பல்தரப்பு நிறுவனத்துடனும் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள திறந்த மனப்பாங்கை கொண்டிருக்கும்.
7. தேசிய மக்கள் சக்தியின் கல்விக் கொள்கை என்ன? தனியார் கல்விக்கு தேசிய மக்கள் சக்தி எதிரானதா?
அனைத்து குடிமக்களின் கல்வி உரிமையை உறுதி செய்யும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. கல்விக்கு சமத்துவத்தை பேணுவது மட்டுமல்ல, கல்வியின் நிலையையும் தரத்தையும் உறுதிப்படுத்துவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும். தேசிய மக்கள் சக்தியின் கல்விக் கொள்கையின் முதன்மை வகிப்பது, 1 ஆம் ஆண்டில் நுழையும் பிள்ளையை 13 ஆம் ஆண்டு வரை கல்வியை பெற அழைத்துச் செல்வதும், அதன் பின் தமது விருப்புக்கும் திறனுக்கும் ஏற்ப உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தி, தொழில்முறை அல்லது கல்வித் துறைகளில் பிள்ளைகளுக்கு உயர் கல்வியை வழங்குவதும் ஆகும். இதற்காக, அரசாங்கத்தினால் பெரியளவிலான முதல் ஒதுக்கப்பட்டு , கல்வித்துறையை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
கடந்த தசாப்தங்களாக அரச கல்வி முறை தொடர்பில் உரிய கவனம் செலுத்தாமல் புறக்கணிக்கப்பட்டதன் விளைவாக தற்போது இலங்கையில் தனியார் கல்வித் துறை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
கல்வியின் தரத்தையும் சம உரிமையையும் உறுதிப்படுத்த முடிவது அரசாங்கத்தின் மூலம் கல்வியை உறுதி செய்யும் அமைப்பில் என்பது நமது நம்புகிறோம். ஆனால் அப்படி ஒரு சூழ்நிலையை உருவாக்க சிறிது காலம் எடுக்கும்.
இடைமாறு காலத்தின் போது, அரச கல்வியின் நிலையையும் தரத்தையும் உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், தற்போது இலங்கையில் நிறுவப்பட்டுள்ள தனியார் கல்வித்துறையானதுஒரு ஒழுங்கு முறையின் கீழ் கொண்டு வரப்பட்டு எமது தேசிய கல்வித் திட்டத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்படும். அரசின் கல்வி முறை வளர்ச்சியடைந்த பிறகும், ஒரு பிள்ளை தனியார் கல்வியை அணுக விரும்பினால், அதைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை நாங்கள் மறுக்கப்போவதில்லை.